கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Tuesday, July 23, 2013

மறைவாய் சொன்ன கதைகள் 8

வெத்திலைக்கு 'அந்த' வாசம்
வெற்றிலையை முகர்ந்து பார்த்திருக்கிறீர்களா...ஒரு வித மணம் வீசுமே...அது எந்தமாதிரியான என்று ஒரு நாட்டுப்புற கதை இருக்கிறது. நம்ம கி.ராஜநாராயணனோட நாட்டுப்புறகதைகள் 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' புக்லே இருந்து....(நீலக்குயில் பதிப்பகம்). ஒரு புராண-நாட்டுப்புற புனைவு


    வெத்திலைக்கு ‘அந்த வாசம் எப்படி வந்தது தெரியுமா?
    தாத்தா கேட்டார்.

    எந்த வாசம்?

    வெற்றிலைக் கட்டிலிருந்து ஒரு வெற்றிலையை உருவி எடுத்து, அவரும் முகர்ந்து பார்த்து எங்களுக்கும் தந்தார்.

    முகர்ந்ததும் ‘ஒரு வாசனை’ வீசியது! ஒரு மனுஷப் பெண் அடி உடம்பின் வாசம். அதைத் திரும்பவும் முகர்ந்து பார்த்ததில் மேலும் தெளிவு கிடைத்தது.


    தாத்தாவை ஓரக் கண்ணால் பார்த்தேன். இந்தக் கிழவனை என்ன செய்ய என்று தோன்றியது! எத்தனை தடவை வெத்திலை போட்டிருப்போம். இதை நாம் அறியலையே. பெண்டுகளின், முக்கியமாக குமரிப்பெண்டின் இந்த ‘மணத்தை’ இந்தக் கிழம் அறிந்த விந்தை எது?

    இப்போது நாம் யூகித்து அறிந்த இந்த முடிவும் சரியானதுதானா?
    இப்படித் திகைத்துக் கொண்டிருந்த வேளையில் தாத்தா அதன் கதையை ஆரம்பித்தார்.

    இந்திரனுடைய விருந்தாளியாக அர்ச்சுனன் தேவலோகத்துக்குப் போயிருந்தான். அப்போ அவன் பிரம்மச்சரிய விரதம் பூண்டிருந்த நேரம். ரொம்ப நாளாய் அவனை, தேவலோகத்துக்கு வந்து தன்னோட விருந்தினனாகக் கொஞ்ச நாள் தங்கி இருந்துவிட்டுப் போகும்படி சொல்லி வேண்டிக் கொண்டே இருந்தான் இந்திரன். ஆனால் அவன் போய்ச் சேர்ந்த்தோ இப்படி பிரம்மச்சரிய விரதம் இருக்கும் நேரமாகப் பார்த்து அமைந்து விட்டது.

    தேவலோகத்தில் அவன் எல்லா இன்பங்களையும் அனுபவித்துப் பார்க்கலாம்; பெண் சமாச்சாரத்தை மட்டும் ஏறெடுத்தும் பார்க்க முடியாது. தன்னுடைய பையனுக்கு இந்த சமயமாகப் பாத்து இப்படி அமைந்து விட்டதே என்று தேவராஜனான இந்திரனுக்குக் கொஞ்சம் வருத்தம் தான்!

    தேவலோகத்திலுள்ள பேரழகிகளான நாட்டியமாதர்களுக்கு- ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலான பெண்டிருக்கு – தேவலோகத்திலுள்ள முனிபுங்கவர்கள், தவசிகள், ரிஷிகள் இவர்களுடைய ரோமம் அடர்ந்த தாடி மூஞ்சிகளையே பார்த்துப் பார்த்துச் சலித்துப் போயிருந்ததால் அர்ச்சுனனுடைய முகத்தைப் பார்த்ததுமே அதுகளுக்குக் குளிர் ஆட்டியது.
    அர்ச்சுனன் பொம்பளை விஷயத்துல எப்படி சபலசித்தனோ அதேபடிக்கு ‘மகாமன’ அடக்கமுடையவன்.

    ‘ஆத்து மணலை எண்ண முடிஞ்சாலும் அர்ச்சுனனுக்குப் பெண்டாள இசைந்தவர்களை எண்ணி மாளாதுங்கிறது’ சொலவடை. இந்த விஷயத்தில் கிருஷ்ணர், அர்ச்சுன்ன் ரெண்டு களுதைப்பயல்களும் ஒண்ணுதான் என்று தாத்தா ஒரு போடு போட்டுவிட்டு மேற்க்கொண்டு தொடர்ந்தார்.

    அர்ச்சுனனைக் கவர்ச்சி பண்ண அதுகள் சாமர்த்தியத்தையெல்லாம் காட்டி ஆடினாங்களாம். அவனுக்கு சகல பணிவிடைகள் செய்ய, கவனிச்சுக்கிட இதுகளைத்தான் இந்திரன் ஏற்பாடு பண்ணியிருந்தானாம்.

    என்ன செஞ்சி என்ன அர்ச்சுனன்கிட்டே அதுக குண்டு பலிக்கலே.
    சரி, இவனே இன்னொரு சமயந்தான் வச்சிக்கிடணும் என்று சொல்லி மத்ததுகள்ளாம் கைவிட்டு விட்டதுக. ஆனா இந்த ஊர்வசி இருக்காளே மகா ‘பிடிசாதகம்’ பிடிச்சவ. கொஞ்சம் வித்தியாசமான பொண்ணுனு வச்சிக்கிடுங்களேன்.

    அவனைப் பார்த்து பாத்து மருகுதாளாம். வேண்டி வேண்டி கேட்டுக்கிட்டாளாம். ஒரு பொம்பளை வாயைத் தொறந்து கூப்பிட்ட பெறவும் ஒரு ஆம்பளைப் பயல் மாட்டேம்னு சொன்னா அது மாதிரிப் பாவம் வேற உண்டுமா? அந்தப் பாவமும் பெறவு அர்ச்சுனனைப் பிடிச்சது. அவ ஒரு வார்த்தை கேட்டா அவனைப் பார்த்து, ‘பேடிப்பயலே’ன்னுட்டு. அதுதாம் பலிச்சது பின்னாலே. அது அவ கொடுத்த சாபம் என்றார் தாத்தா

    உடனே சாபம் கொடுத்துட்டாளா என்று கேட்டோம். உடனே கொடுக்கலை. பூலோகத்துல வந்துதாம் கொடுத்தா
    பூலோகத்துக்கு எதுக்கு வந்தா
    அர்ச்சுனன் பூலோகத்துக்குத் திரும்புனப்போ அவளும் அவனெத் ‘தொரத்திக்கிட்டே’ வந்தா. இவம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாம்; எங்கூட வராதேன்னுட்டு. யாரு கேப்பா!

    இப்பதாம் நம்ம கதைக்கு வர்றோம் என்று சொல்ல தொடங்கினார் தாத்தா. இந்த ஊர்வசிக்கு ஒரு பழக்கம் உண்டு. பிரியமா வெத்திலை போடுவா. அப்போ பூலோகத்துல வெத்திலை கிடையாது. அது தேவலோகத்துல மட்டுந்தான் இருந்த்து. தேவர்களுக்கு மட்டும்தான் உகந்த வஸ்த்து. அதை பூலோகத்துக்கு கொண்டு வந்தவளே இந்த ஊர்வசிதாம்.

    அதை ‘சட்டப்படி’ இங்கே கொண்டு வரப்படாது. அதனாலே ஒளிச்சிவச்சிக் கொண்டு வந்தா. அர்ச்சுனன் பூலோகத்துக்குப் புறப்பட்டுட்டாம்னு தெரிஞ்சதும், அவசர அவசரமா அவ வீட்டுத் தோட்டத்துல பயிராகியிருந்த வெத்திலைக் கொடியில கிள்ளி இலையை பறிக்க நேரமில்லாததுனால கொடியோடவே பறிச்சு ஒளிச்சு வச்சுக்கிட்டா.

    இப்போ நாம, தேசம் விட்டு தேசம் போனா சோதனை போட்டுத்தானே வெளியே விடுறாங்க. அதுபோல தேவலோகத்திலிருந்து பூலோகத்துக்கு வந்தா சோதனை போட்டுப் பார்த்துத்தாம் அனுப்புவாங்களாம். இது பெரியவங்களுக்கு கிடையாது. சில்லுண்டிகளுக்குத்தாம் என்றார் தாத்தா.

   
அதனால் ஊர்வசி என்ன செஞ்சாளாம். வசமா அந்த இடத்தில வச்சிக் கட்டிக் கொண்ணாந்துட்டாளாம் என்று சொல்லிச் சிரித்தார்.
    ‘செ’ என்றான் கிட்டான் முகம் சுளித்து
    ‘என்னடா…செ…தோ…ன்னுகிட்டு. நாளைக்கு கலியாணம் ஆனா அதுல தாம் தலைவச்சுப் படுத்துக் கெடப்பே’ என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.

    இந்த அளகுலதாம் வெத்திலை பூலோகத்துக்கு வந்து சேர்ந்த்து.
    கடைசி வரைக்கும் அர்ச்சுன்னை இணங்கவைக்க முடியலை ஊர்வசியாலே
    அவம்மேல உள்ள கோபத்தாலே வெத்தலையை உதறி எறிஞ்சுட்டு அவனுக்கு சாபமும் கொடுத்துட்டும் போயி சேந்தா, தேவலோகத்துக்கு.

    அப்படி விழுந்த வெத்திலை கொடி தாம் தளுத்து பூலோகவாசிகளுக்கு வெத்திலையாச்சு. இன்னைக்கும் பிரியத்துக்கு ஒரு அடையாளமாக இருக்கு. பிரியமாக் கொடுத்தாத்தாம் வெத்திலையும் செவக்கும்